28 February 2019

ஆரிடத்தில் ஏகுவோம் எம் ஆண்டவனே

கி.கீ:189

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆரிடத்தினில் ஏகுவோம்?

 

189. (200) சாவேரி                                                  சாபு தாளம்

 

                             பல்லவி

 

          ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,

            ஆரிடத்தில் ஏகுவோம்?

 

                             அனுபல்லவி

 

            ஆரிடத்தில் ஏகுவோம்?  சோராநித்திய ஜீவ

            நேரார்[1] வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி. - ஆரி

 

                             சரணங்கள்

 

1.         பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது

            தாவரமில்லை; நீரே

            ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக

            மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம். - ஆரி

 

2.         போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து

            போவதில்லை, பரமனே,

            ஞானோபதேச குருவான உம்மை அண்டின

            ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து. - ஆரி

 

3.         உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்

            உள்ள பொருளனைத்தையும்

            முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள்

            தெற்றாய்,[2] இனியும்மைநன்றி-யற்றோர்போலே நெகிழ்ந்து. - ஆரி

 

4.         பொன் னுலகத் திருந்தெம்மைப்-புரக்க வந்த

            புண்ய நாதன் நீரல்லவோ?

            பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது

            நன்னய முகப்பிர-சன்ன மதனை விட்டு. - ஆரி

 

 

- யோ. பால்மர்



[1] நன்னெறி

[2] நிச்சயமாய்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...