நின் பாதம் துணை அல்லால்


வேறொரு துணை இல்லை

190. (226) காம்போதி                                              சாபு தாளம்

பல்லவி

            நின் பாதம் துணை அல்லால், வேறொரு துணை
                        இல்லை,-
            நித்ய பரம போதா.

அனுபல்லவி

            என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ,
            ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா! - நின்

சரணங்கள்

1.         ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்;
            ஜாதி அனைத்தும் உய்ய,[1] நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில்
                        இறந்தீர்;
            வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும்
                        சிறந்தீர்;
            ஏதம்[2] இல்லாத னாதி திருமகனே.
            எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா! - நின்

2.         தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும், சித்தம் இரங்கி
                        வாரும்;
            மேவி எனது வினை யாவும் அகல இந்த வேளை எனையும் காரும்;
            பாவிக்குதவியாக, மனுவேலே, நீர் பட்ட பாடனைத்தையும்
                        பாரும்;
            ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன்;
            ஆபத்தை நீக்கும், ஐயா, இப்போ மெய்யாய்! - நின்

- வே. சாஸ்திரியார்


[1] பிழைக்க
[2] குற்றம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு