27 February 2019

ஆரும் துணை இல்லையே

கி.கீ:165

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

ஆரும் துணை இல்லையே

 

165. (184) முகாரி                                                    சாபு தாளம்

 

பல்லவி

 

          ஆரும் துணை இல்லையே, எனக்

            காதியான்[1] திருப்பாலா;-உன்தன்

            ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்

            தாளுவாய், யேசுநாதா.

 

அனுபல்லவி

 

            சீர் உலாவு பூங்காவில் ஓர் கனி

            தின்ற பாதகம் மாற்றவே,

            சிலுவை மீதினில் உயிர்விடும்

            தேவனே, என் சுவாமி. - ஆரும்

 

சரணங்கள்

 

1.         முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே,

            முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா, கிருபை கூர்வையே;

            சிந்தும் உன் உதிரத்தில் என் வினை தீர்த்திரட்சியும், ஐயனே;

            தீயபாவி எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே! - ஆரும்

 

2.         தந்தை தாயரும், மைந்தர் மாதரும் சகலரும் உதவார்களே;

            சாகும்நாளதில் நீ அலால் எனைத் தாங்குவார்களும் உண்டுமோ?

            சொந்தம் நீ எனக்கன்றி, வேறொரு சொந்தமானவர் இல்லையே,

            சுற்றமும், பொருள் அத்தமும்[2] முழபத்தமே,[3] என் தத்தனே! - ஆரும்

 

3.         கள்ளனாயினும் வெள்ளனாயினும்[4] பிள்ளை நான் உனக் கல்லவோ?

            கர்த்தனே, வலப் பக்கமேவிய கள்ளனுக் கருள் செய்தையே;

            தள்ளி என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள், அப்பனே.

            தயவாய் ஒரு குருசில் ஏறிய சருவ ஜீவ தயா பரா. - ஆரும்

 

4.         நன்றி அற்றவனாகிலும் எனைக் கொன்று போடுவதாகுமோ?

            நட்டமே படும் கெட்ட மைந்தனின் கிட்ட ஓடினதில்லையோ?

            கொன்றவர்க் கருள் செய்யும் என்று பிதாவை நோக்கிய கொற்றவா,[5]

            குற்றம் ஏது செய்தாலும் நீ, எனைப் பெற்றவா, பொறுத்தாள்வையே. - ஆரும்

 

5.         பத்தியேதும் இலாது மாய சுகத்தை நாடிய பித்தனாய்ப்

            பாழிலே என்றன் நாள் எலாங் கெடுத் தேழையாகினேன், என்செய்வேன்?

            சத்ருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடிதல்லவோ?

            தஞ்சம் அற்றவன் ஆகினேன், உன தஞ்சல்[6] கூறும் அனாதியே. - ஆரும்

 

- வே. சாஸ்திரியார்



[1] முன்னவன்

[2] செல்வமும்

[3] முழு அபத்தமே

[4] வெண்ணிறத்தவன்

[5] அரசனே

[6] அஞ்சாதே என்று

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...