பாவி இன்றே திரும்பாயோ? நேச


இன்றே திரம்பாயோ?

151. (173) செஞ்சுருட்டி                                   ஆதி தாளம்

பல்லவி

                   பாவி, இன்றே திரும்பாயோ?-நேச
                   ஆவியின் சத்தம் கேளாயோ?

அனுபல்லவி

            மேவி தயை நிரம்பி, ஏவி உனை விரும்பிக்
            கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி. - பாவி

சரணங்கள்

1.         பாவம் தொடர்ந்து செல்லுமே;-பாவ
            சாபம் அடர்ந்து கொல்லுமே;-உனின்ப
            லாபம் எல்லாமே சாபம்; காலமிதுவே காலம்;
            தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு. - பாவி

2.         எத்தனை போதனை பெற்றாய்,-ஐயையோ!
            சுத்தமாய்ச் சாதனை அற்றாய்,-என்றாலும்
            அத்தனை பாவத்தையும் முற்றுமாக வெறுத்து,
            அத்தனே, தத்தம் செய்தேன், நித்தமும் காவுமென்று. - பாவி

3.         கல்வாரியில் தொங்கினோர் யார்?-உனக்
            கல்லோ நேசர் ஏங்கினோர் பார்!-இன்னும்
            பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகிச்
            செல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான. - பாவி

4.         நிலை யின்றலை கின்றோரே,-ரத்த
            விலை மதியாமல் சென்றோரே,-போதும்;
            மலையாமல் யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி,
            உலையா, நம்பிக்கை வைத்து நிலையான ரட்சைபெற. - பாவி

- ஜ.த. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு