என் ஐயா தினம் உனை நம்பி நான்
என் கலி நீங்கும்படி நல்பாங்கு பரியாயோ?
178. (220) முகாரி ஆதி
தாளம்
பல்லவி
என் ஐயா,
தினம் உனை நம்பி நான்
இருப்ப தறியாயோ?-மன
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ?
அனுபல்லவி
அன்னை யிடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா, கிறிஸ்தையா எனதையா,
அருள் செய்யாதது மெய்யா இது? - என்
சரணங்கள்
1. குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம்
கூசி நாணுதே;-என்தன்
கோதும்[1] நான்
செய்த தீதும் மனதில்
கூடத் தோணுதே;
சுற்றும் உலகச் சத்துருப் பகை
சூழக் காணுதே;
சுருதி மொழி உறுதி தனைக்
கருதி வந்தேன்; பொறுதி அருள்! - என்
2. உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
குதவி இல்லையே;-என
துற்ற ஜனமும் சுற்றத் தோர்களும்
உரிமை இல்லையே;
பின் எவரிடம் போவேன், சொல்? அது
பெரிய தொல்லையே;
பேசும் விசு வாசம் வளர்
நேசக் கதிர் வீச அருள்! - என்
3. அத்தனே, உன்றன் ரத்தத்தால் எனை
ஆற்றித் தேற்றையா,-தேவ
ஆவியாகிய ஈவெனும் உன
தருளை ஊற்றையா,
நித்தனே, என்றன் குற்றத்தை எல்லாம்
நீக்கி ஆற்றையா,
நேசா, பவ நாசா, மறை
வாசா, ஏசு, ராசா அருள்! - என்
- மரியான் உபதேசியார்
Comments
Post a Comment