ஆசையாகினேன் கோவே உனக்
ஆசையாகினேன் கோவே
193. (208) யமுணாகல்யாணி ரூபகதாளம்
பல்லவி
ஆசையாகினேன்,
கோவே-உனக்
கனந்த ஸ்தோத்திரம், தேவே!
அனுபல்லவி
யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே
தட்சகா![1] -ஆசை
சரணங்கள்
1. வேதா, ஞானப் பர்த்தா,[2]-என்-தாதா,
நீயே கர்த்தா;
மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா.
- ஆசை
2. கானான் நாட்டுக் கரசே,-உயர்-வான் நாட்டார்
தொழும் சிரசே,
நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம்
பாடி. - ஆசை
3. வீணாய் காலம் கழித்தேன்;-சற்றும்-தோணாமல்
நின்று விழித்தேன்
காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே,
எனைத் திருத்தே. - ஆசை
4. வந்தனம், வந்தனம், யோவா!-நீ-சந்ததம் சந்ததம்
கா, வா,
விந்தையாய் உனைப் பணிந்தேன், சத்ய வேதா,
யேசு நாதா! - ஆசை
-
வே. சாஸ்திரியார்
Comments
Post a Comment