பாவி என்னிடம் வர


என்னிடம் வர மனதில்லையா?

144. மோகனம்                                               ஆதி தாளம்

பல்லவி

                   பாவி, என்னிடம் வர
                   மனதில்லையா? ஓ!

சரணங்கள்

1.         பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ,
            சீவன் தனைப்பெறவே. - ஓ! பாவி

2.         இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த்
            தெருளொளி தனைப் பெறவே. - ஓ! பாவி

3.         என் சமாதானம் உன் சுகமாகும்,
            நெஞ்சைப் பூராய்த் திறந்து. - ஓ! பாவி

4.         அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ?
            பரிசுத்தஞ் செய்வேனே. - ஓ! பாவி

5.         மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம்,
            விண்ணிலிடங் கிடையா. - ஓ! பாவி

6.         எனதிடம் அருகும் எவரையுந் தள்ளேன்,
            கணத்தில் விரைந்திடுவாய். - ஓ! பாவி

- வே. மாசிலாமணி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு