நம்பினேன் உன தடிமை நான் ஐயா


நடத்திக் காப்பதுன் கடமை

200. (232) ஆனந்தபைரவி                                   ரூபக தாளம்

பல்லவி

          நம்பினேன், உன தடிமை நான், ஐயா;-
          திடப்படுத்தி என்றனை-
          நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா

சரணங்கள்

                        உம்பரும்[1] புவி நண்பரும் மற்ற
                        உயிர்களும் பல பொருள்களும் தொழும்
                        தம்பிரானே, மெய் யம்பராபரா,
                        தாசன் மீது நன் னேசு அருள் செய். - நம்பி

சரணங்கள்

1.         தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின்
                        அருள்
            செய்து பின்வரும் இடர்களை அறுத்து,
            வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின்
                        செல்ல, உன்
            மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து;
            ஆதாரம் எனக்கார், உனை அன்றி?
            அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?-உன்
            பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப்
            பாரும், கிருபையைத் தாரும், ஐயனே! - நம்பி

2.         சுத்த இருதயத்தினைத் தருவாய்-பரிபூரணானந்த
            ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய்,
            நித்தமும் பய பக்தியைத் தருவாய்;-நான் ஊழியம்செய்ய,
            நீதனே, எந்தன்முன்எழுந்தருள்வாய்;
            அத்தனும் அனு கூலனுமான
            பத்தனே; பரிசித்தனே, உனைப்
            பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! - நம்பி

3.         ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும்,-சுவிசேஷ உரையை
            உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்;
            ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்;-உனக்கூழியம்
                        செய்ய
            ஆவியும் அதின் ஈவதும் வேணும்?
            ஏக்கமும் மனக்கவலையும் நித்ய
            இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு
            வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன்
            வாரும், கிருபை தாரும், ஐயனே! - நம்பி

- மரியான் உபதேசியார்


[1] வானவரும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு