இறைவன் நீயே எளியனுக்


எளியனுக்கிரங்குவாயே

175. (217) கல்யாணி                                       ரூபகதாளம்

பல்லவி

                                    இறைவன் நீயே;-எளியனுக்
                                    கிரங்குவாயே.

அனுபல்லவி
                        மறை விளக்கி இந்நரரை மீட்க,-இம்
                        மானுவேல் எனும் நாமம் மேவியே,
                        தரையில் வந்தவ தரித்த ஏழைகள்
                        தாதா, ஏசுநாதா, என். - இறை

சரணங்கள்

1.         அண்டர்கள்[1] போற்றும் விண்ணோனே-எங்கள்
            ஆதரவாய் உற்ற கோனே,-நல்ல
            தொண்டர்களுக் கருள் புரியும் நன் மனத்
            தூயா, அன்பர் நேயா, என். - இறை

   2.      நன்று திகழ்[2] பெரியோனே-திவ்ய
            ஞானம் எனும் பெயரோனே,-இயல்
            அன்றும் இன்றும் ஒன்றுபோல உறும்
            ஐயா, ஒளிர் மெய்யா, என். - இறை

3.         எங்கும் நிறைந்த வல்லோனே,-அன்பர்க்
            கின்பு செய்கின்ற நல்லோனே,-மிக
            இங்கிதமாய்[3] உனை ஏத்தித்[4] தொழ அருள்
            ஈவாய்; க்ருபை ஆவாய்; என். - இறை

- யோ. பால்மர்


[1] தேவதூதர்கள்
[2] ஒளிவீசும்
[3] இனிமையாய்
[4] துதித்து

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு