ஐயோ நான் ஒருபாவ ஜென்மி ஆனேனே


நான் ஒரு பாவ ஜென்மி

160. (178) நீலாம்புரி                                                ஆதி தாளம்

கண்ணிகள்

1.         ஐயோ, நான் ஒருபாவ ஜென்மி ஆனேனே!
            ஆண்டு ரட்சித் தருள்வாய்,-மனுவேலனே!
            உய்யும்படி, தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர்
            ஒதுக்கிட முண்டோ வேறே?-மனுவேலனே!

2.         நல் வரமாய்ப் பெற்ற நீதி, சுசி, பாக்கியம்
            ஞானம் எலாம் இழந்து,-மனுவேலனே!
            சொல்ல வெட்கம் அநீதி, சுசிகேடு, நிர்பாக்கியம்,
            துர்ப்புத்தியும் அடைந்தேன்,-மனுவேலனே!

3.         மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை
            மங்கு[1] கடாக்கி னேனே,-மனுவேலனே!
            ஆட்சி கொளும் உன் சுத்த ஆலயமாம் என் நெஞ்சை
            அலகைக் கிடம் ஆக்கினேன், - மனுவேலனே!

4.         உன்னை முழுப் பெலத்தால் நேசியாமலே நெஞ்சம்
            உரங் கொண்ட பாவி ஆனேன்;-மனுவேலனே!
            என்னை நிகராக என் பிறனை நேசியாமல் நான்
            இகலுற்[2] றிருந்தேனையா, - மனுவேலனே!

5.         துப்புர வாம் சுத்தக் கண்ணனே, உன் முன் இன்னும்
            துணிகர மாய் நடந்து,-மனுவேலனே!
            இப்படி ஜென்ம கன்ம பாவத்தால் கேடடைந்த
            ஏழைப் பாவிக் கிரங்காய், - மனுவேலனே!

- யோ. பால்மர்


[1] வாடிய
[2] பகைகொண்டு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு