ஐயா உனதருள் புரி அருமை
ஐயா உனதருள்புரி
169. (77) மாஞ்சி ஏகதாளம்
பல்லவி
ஐயா,
உனதருள் புரி, அருமை மேசையா!
அனுபல்லவி
பொய்யா
மருள்வினை, செய்யா துலகதில்
நையா தடிமைகொள், துய்யா, மெய்யா.
- ஐயா
சரணங்கள்
1. ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா,
சாதா ரண வேத வினோத சங்கீதா,
காதா ர வினவு,[1] நீ
தா எனின் குறை,
தாதா, பர குரு நாதா, போதா! - ஐயா
2. அந்தா தி, அனாதி, பிதா ஒரு மைந்தா;
சிந்தா குலமே[2] தவிர்,
நீடு சுகந்தா;
பந்தா,[5] வருசதா
னந்தா நந்தா! - ஐயா
3. ஈசா, நசராபுரி மேவிய வாசா,
பூசா[6] விதி
மாமறை புகழுபதேசா,
மாசா மிகு பவ நாசா, எருசலை
ராசா, ஒரு சரு வேசா, நேசா. - ஐயா
-
வே. சாஸ்திரியார்
Comments
Post a Comment