பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்


பாவியாகவே வாறேன்

184. (182) மோகனம்                                                சாபு தாளம்

பல்லவி

          பாவியாகவே வாறேன்;[1] பாவம் போக்கும்
          பலியாம் என் யேசுவே, வாறேன்.

சரணங்கள்

1.         பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்
            போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் - பாவி

2.         நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே;
            தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் - பாவி

3.         பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
            போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் - பாவி

4.         ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன்,
            தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் - பாவி

5.         துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர்;
            இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் - பாவி

6.         உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய தடை யாவும்
            உன்னன்பால் நீங்கி நல் உயிர் அடைந்தோங்கவே நான் - பாவி

- ஏ. வெப்.


[1] வருகின்றேன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு