என்னையும் உம தாட்டின் மந்தையோ


ஏற்றுக் காத்திடும் யேசுவே

186. (198) கல்யாணி                             சாபு தாளம்

பல்லவி

                   என்னையும் உம தாட்டின் மந்தையோ
                   டேற்றுக் காத்திடும், யேசுவே.

சரணங்கள்

1.         வன்னியான[1] தோர் அலகைப் பேய் தனை
            வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்-து
            இந்நிலத்தினில் வந்துதித்த நல்
            ஏசுவே, எனைச் சேர்த்திடும். - என்னையும்

2.         ஜயிருபது ஆட்டினில் ஒன்று
            அகன்றிட, மனம் உகந்து கோன்,-அதை
            மெய்யதாகவே தேடுவான் என்ற
            மேய்ப்பரே, எனைச் சேர்ந்திடும். - என்னையும்

3.         வாசலாகவே இருக்கிறேன், எனால்
            வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு
            நேசமாகவே வாழ்வான், என்ற நல்
            நிமலனே, எனைச் சேர்ந்திடும். - என்னையும்

4.         நல்ல மேய்ப்பன் நான் என மொழிந்த என்
            நாதனே, ஞான போதனே,-ஜீவ
            புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனைப்
            போஷித்து முசிப்பாற்றிடும். - என்னையும்

5.         மேய்ப்பராகவே இருக்கிறீர், எந்தம்
            மேய்ச்சலும் நீர் தாமலோ,-ஞான
            வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான்
            வளர்ந்திட அருள் புரிந்திடும். - என்னையும்

- மரியான் உபாத்தியாயர்


[1] நெருப்பான

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு