27 February 2019

ஆண்டவனே கிருபை கூராய்

கி.கீ:170

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆண்டவனே கிருபைகூராய்

 

170. (60 L) மோகனம்                                     சாபு தாளம்

 

                             பல்லவி

 

            ஆண்டவனே கிருபை கூராய்-எனக்

            காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்

 

                             அனுபல்லவி

 

                        மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா

                        ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா! - ஆண்

 

                             சரணங்கள்

 

1.         துர்க்குணத்தி லுருவானேன்,-பொல்லாத்

            தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன்,

            நற்குண மென்னில்நான் காணேன்,-நித்ய

            நாச மரண நரகுக்குள்ளானேன்,

            சற்குண மன்பு தயைமிகு தேவா!

            தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா! - ஆண்

 

2.         பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே,-பாவம்

            பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே,

            நோவென்னைப் பிசித்ததென் ஐயே!-எனை

            நோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே,

            ஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ?

            என்பாவச் சேற்றை விட்டென்னை தூக்காயோ? - ஆண்

 

3.         சாபத்துக்காளாய்ப் போனேன்,-சீனாய்த்

            தன்னிடி குமுறலின் சத்தங்கேட்டேனே,

            கோபத்தின் தீயைக்கண்டேனே,-தேவ

            கோஷ்ட முணர்ந்தே கலக்கமுற்றேனே,

            ஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம்,

            ஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம் - ஆண்

 

4.         பாடெனக்காய்ப் பட்டாயன்றோ?-என்றன்

            பத்தாநின்சாவு நான் சாவதற்கென்றோ?

            கேடென்னில் நிற்பதும் நன்றோ?-என்னைக்

            கேளாதிருக்க உன்றன் மனங்குன்றோ?

            நாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய்,

            நம்பினபேர்க்கா யுயிர்தங்கு சென்றாய். - ஆண்

 

 

- ஞா. சாமுவேல்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...