தருணமே பரம சரீரி எனைத்


எனைத் தாங்கி அருள், கருணைவாரி

179. (222) சைந்தவி                                                ஆதி தாளம்

பல்லவி

                             தருணமே, பரம சரீரி; எனைத்
                             தாங்கி அருள், கருணைவாரி.

அனுபல்லவி

                        உரிமை அடியர் அனுசாரி,-உயர்
                        எருசலை நகர் அதி காரி, அதி - தரு

சரணங்கள்

1.         வரர்[1] அடி தொழும் வெகு மானி,[2]-பரன்-மகிமை ஒளிர்
                        தேவ சமானி,
            நரர் பிணை ஒரு பிரதானி,-யேசு-நாயகன் என தெஜமானி,
                        அதி.                                                                - தரு

2.         ஆதாரம் உனை அன்றி யாரே?-எனை-அன்பாய்த் திருக்கண்
                        கொண்டு பாரே;
            பாதாரவிந்தம்[3] கதி சேரே,-இஸ்ரேல்-பார்த்திபன் தவிது
                        வங்கிஷ வேரே, அதி.                                       - தரு

3.         நித்த நித்த மாக என்றன் மேலே-வருவ-தெத்தனை துன்
                        பங்கள் ஒருக்காலே;
            அத்தனையும் நீக்குதற்குன் காலே-எனக்-குத்தம துணைதான்,
                        மனு வேலே, அதி.                                             - தரு

4.         கங்குல[4] பகலும் துயரம், கோவே;-வரும்-கலக்கம் ஒழித்
                        தெனைத் தற் காவே!
            பங் கெனக்குத் தந்த மெய் மன்னாவே,-ஏழைப்-பாவியை
                        ரட்சியும், ஏசு தேவே! அதி.                               - தரு

- வே. சாஸ்திரியார்


[1] வானோர்
[2] பெரியோர்
[3] பாதமாகிய தாமரை
[4] தோட்டத்தில்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு