இயேசு ராசா எனை ஆளும் நேசா


யேசு ராசா எனை ஆளும்

188. (76) தேரடி                                   ரூபக தாளம்

பல்லவி

                        யேசு ராசா,-எனை-ஆளும் நேசா!

சரணங்கள்

1.         மாசிலா மணி ஆன முச்சுடர்
            மேசியா அரசே,-மனு
            வேலே, மாமறை நூலே, தேவ செங்
            கோலே, இங்கெனின் மேலே அன்பு செய். - யேசு

2.         தாவீ தரசன் மைந்தா,-நின்
            சரணம், சரணம், எந்தா!-சதா
            னந்தா வா னந்தா, உ
            வந்தாள்[1] மிக வந்தனம், வந்தனம்! - யேசு

3.         ஐயா, என் மனம் ஆற்றி,-உன
            தடிமை என்றெனைத் தேற்றிக்,-குண
            மாக்கி, வினை நீக்கிக், கை
            தூக்கி, மெய்ப் பாக்கியம் கொடு. - யேசு

4.         சுத்த திரித்துவ வஸ்துவே,-சுவி
            சேட மகத்துவ கிறிஸ்துவே,-பரி
            சுத்தனே, கரி சித்தெனை இ
            ரட்சித் தடிமைகொள்; நித்தியம் தோத்திரம்! - யேசு

5.         மங்களம் ஈசாவே,-வளம் மிகும்
            சங்கையின் ராசாவே,-நரர்
            வாழ்வே, மன் னாவே, மெய்த்
            தேவே, உமக் கோசன்னாவே. - யேசு
- வே. சாஸ்திரியார்


[1] உவப்புடன் ஆள்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு