என் உள்ளங் கவரும் நீர் மரித்த


என் உள்ளங் கவரும்

199. உசேனி                                        ரூபக தாளம்

பல்லவி

                   என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த
                   இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட.

அனுபல்லவி

            என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
            இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. - என்

சரணங்கள்

1.         உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்,
            உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்,
            எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும்,
            இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. - என்

2.         சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
            முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
            அத்தனே, உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
            சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட. - என்

3.         உந்தனடிதனில் உறைந்து தனித்து
            ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்;
            என் தேவனே, அதி நேசமாய் உம்முடன்
            இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம். - என்

4.         அம்பரா, மரண ஆழி[1] தாண்டும் வரை
            அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு;
            என் பரனே, உந்தன் அன்பின் ஆழத்தை நான்
            இம்மையில் கூடியமட்டும் அறிந்திட. - என்
- வே. சந்தியாகு


[1] கடல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு