27 February 2019

ஆண்டவா மோட்சகதி நாயனே

கி.கீ:155

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   பாவிக் கிரங்கையனே

 

155. (83) சங்கராபரணம்                                           ஆதி தாளம்

 

                             பல்லவி

 

            ஆண்டவா, மோட்சகதி நாயனே,

            மீண்டவா, பாவிக் கிரங்கையனே.

 

                             சரணங்கள்

 

1.         நீண்ட ஆயுளுள்ளவா, நெறிமறை கொடுத்தவா,

            தாண்டி உலகில் வந்தாயே, தயாளமுள்ள யேசுவே - ஆண்டவா

 

2.         பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே;

            சித்தம் வைத்திரங்கமாட்டாயோ, தேவசீல மைந்தனே? - ஆண்டவா

 

3.         பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட

            ஜீவவாக்குரைக்கவில்லையோ, தேற்றல் செய்யும் மீட்பரே? - ஆண்டவா

 

4.         பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயே;

            ஆதரவுநீ தான் அல்லவோ, அருமையுள்ள அப்பனே? - ஆண்டவா

 

5.         கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலே,

            பொல்லாருக்கிரங்கவில்லையோ, பொறுமையுள்ள தேவனே? - ஆண்டவா

 

6.         பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயே;

            கோபமின்றி என்னை நோக்காயோ, குருசில் அறையுண்டவா? - ஆண்டவா

 

 

- யோ. அருளப்பன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...