மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ
உன் நெஞ்செனக்குத் தாராயோ?
150.
(172) ஹரிகாம்போதி ஆதி
தாளம்
பல்லவி
மகனே, உன் நெஞ்செனக்குத் தாராயோ?-மோட்ச
வாழ்வைத்
தருவேன், இது பாராயோ?
சரணங்கள்
1. அகத்தின்
அசுத்தமெல்லாம் துடைப்பேனே,-பாவ
அழுக்கை
நீக்கி அருள் கொடுப்பேனே, - மகனே
2. உன்
பாவம் முற்றும் பரி கரிப்பேனே-அதை
உண்மையாய்
அகற்ற யான் மரித்தேனே. - மகனே
3. பாவம்
அனைத்துமே விட்டோடாயோ?-நித்ய
பரகதி
வாழ்வை இன்றே தேடாயோ? - மகனே
4. உலக
வாழ்வினை விட்டகல்வாயே,-மகா
உவப்பாய்க்
கதி ஈவேன்; மகிழ்வாயே. - மகனே
5. உன்றன்
ஆத்துமத்தை நீ படைப்பாயே,-அதில்
ஊக்கமாய்
வசிக்க இடம் கொடுப்பாயே. - மகனே
- ச. யோசேப்பு
Comments
Post a Comment