27 February 2019

ஆதி பராபரனின் சுதனே

கி.கீ:162

To Download Txt Lyrics file

 

                   எனக்காகவே பாடுகள் பட்டீரோ?

 

162. (180) ஆகிரி                                          சாபுதாளம்

 

                             புலம்பல்

 

1.         ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா,-எனக்

            காகவே இத்தனை பாடுகள் பட்டீரோ, யேசுநாதா?

            தீதணுகாத பராபரன் சேய் அல்லோ, யேசுநாதா?-நீர்

            செய்த குற்றம் அணுவாகிலும் தான் உண்டோ, யேசுநாதா?

            பாதகன் நான் அல்லோ கட்டுண்ண வேண்டிய தேசுநாதா?-சற்றும்

            பாவம் இல்லாத நீர் கட்டுண்ணப் பட்டதேன், யேசுநாதா?

            வாதை எனக்கு வரத்தகும் அல்லவோ, யேசுநாதா?-சற்றும்

            மாசணுகாத நீர் வாதைக்குள் ஆனீரோ, யேசுநாதா?

 

2.         மத்யஸ்தனாய் எனக்காக வந்தீர் அல்லோ, யேசுநாதா?-இந்த

            வஞ்சகன் சொந்தப் பிணையாளி நீர் அல்லோ, யேசுநாதா?

            எத்தனை பாதகம் செய்தவனாகிலும், யேசுநாதா?-எனை

            ரட்சிப்பதுன் கடன் அல்லாமல், ஆர் கடன், யேசுநாதா?

            சத்துரு நான் என் றறிந்தும் இருந்தீரே, யேசுநாதா?-கெட்ட

            சண்டாளன் சிந்தையை முற்றும் அறிவீரே, யேசுநாதா?

            சித்தம் இரங்கி, எனை முகம் பார்க்கவே, யேசுநாதா?-என்னைத்

            தேடி, வலிய வரத் தயவானீரோ, யேசுநாதா?

 

3.         பத்தம் இல்லாததுரோகி நான் அல்லவோ, யேசுநாதா?-உமைப்

            பாடுபடுத்தின பாதகன் நான் அல்லோ, யேசுநாதா?

            பெத்தரிக்கமான பெருமையினாலே நான், யேசுநாதா?-கெட்ட

            பேயைச் சிநேகித்து, இக்கோலம் ஆகினேன், யேசுநாதா?

            புத்தி யில்லா மிருகம்போல் ஆயினேன், யேசுநாதா?-மனம்

            போன வழியெல்லாம் போய் அலைந்தேங்கினேன், யேசுநாதா!

            சித்தம் வைத்தென் பேரில் திருக்கடைக் கண்ணோக்கி, யேசு நாதா!-உன்தன்

            சீர்பதம் சாஸ்வதம் சேவை புரியச்செய், யேசுநாதா?

 

 

- வே. சாஸ்திரியார்

           

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...