பாவியாம் எனை மேவிப்பார்


பாவியாம் எனை மேவிப்பார்

161. (179) உசேனி                                                  ரூபகதாளம்

கண்ணிகள்

1.         பாவியாம் எனை மேவிப்பார், ஐயா-யேசுநாதா, ஸ்வாமி;
            பட்சமாக என் பாவந் தீர் ஐயா.

2.         தேவத்ரோகி பாவி நான் அன்றோ,-யேசுநாதா, ஸ்வாமி,
            சீர்பதம் துணையன்றி வேறுண்டோ?

3.         தீவினையுறு சாவு மேவிற்றே,-யேசுநாதா, ஸ்வாமி;
            சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே.

4.         சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன்,-யேசுநாதா, ஸ்வாமி;
            தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்?

5.         மனது, வாக்கு, வினைகளில் எல்லாம்,-யேசுநாதா, ஸ்வாமி;
            மாசுளோனாய்க் கூசினேன், ஐயா.

6.         என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ,-யேசுநாதா, ஸ்வாமி;
            என்செய்வேனே? மறு தஞ்சம் இல்லையே.

7.         அலகையோடெனை உலகம் ஏய்க்குமே,-யேசுநாதா, ஸ்வாமி;
            ஆதரவில்லை, பாதுகா, ஐயா.

8.         மன்னுயிர்க் கெனத் தன்னுயிர் விட்ட,-யேசுநாதா, ஸ்வாமி;
            வந்தெனது நிர்ப்பந்தம் பார், ஐயா.

- யோ. பால்மர்        

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு