திருப் பதம் சேராமல் இருப்பேனோ


திருப்பதம் சேராமல் இருப்பேனோ?

157. செஞ்சுருட்டி                                                    ஆதி தாளம்

பல்லவி

            திருப் பதம் சேராமல் இருப்பேனோ-நான்
            தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ?

சரணங்கள்

1.         அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்!
            உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்! - திரு

2.         ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே,
            பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே? - திரு

3.         சத்திய மார்க்கமும் சகலமுமான
            நித்திய ஜீவனும் நிமலனுமான. - திரு

4.         ஆறுதல், தேறுதல் அளித்திடும் சேயன்,
            கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன். - திரு

5.         உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்,
            மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம். - திரு

- சா. பரமானந்தம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு