Posts

Showing posts from July, 2023

கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்

கனியே கர்த்தர் விரும்பும் மதுரக் மேலும் அதிக பாடல்களுக்கு                            கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்                         கனியே காணவே அன்பால்                         உன்னைத் தேடி வாராரே   1.          பூத்து மலரும் பூவல்ல             பூவையர் விரும்பும் பூவல்ல             மாந்தர் விரும்பும் பூவல்ல             மகிமை இயேசு விரும்பும் அன்பு - கனி   2.          ஜாதி விலகிடும் தோஷமல்ல             அது சாத்தானால் வரும் தோஷமல்ல             மக்களால் உண்டாகும் தோஷமல்ல             அது மகிபன் விரும்பும் சந்தோஷம் - கனி   3.          சாத்திரம் காட்டும் தானமல்ல             அது சத்திரம் கட்டிடும் தானமல்ல             மாந்தர்கள் செய்திடும் தானமல்ல             நம் மகிபர் விரும்பும் சமாதானம் - கனி   4.          புத்தகம் எழுதும் மையல்ல             அது பூவையர் தீட்டிடும் மையல்ல             மாந்தரை மயக்கும் மையல்ல             மா கோபத்தில் காட்டிடும் பொறுமை - கனி   5.          இத்தரையோர் காட்டும் இ

கன்னி ஈன்ற செல்வமே

கன்னி ஈன்ற செல்வமே மேலும் அதிக பாடல்களுக்கு                   கன்னி ஈன்ற செல்வமே             இம்மண்ணில் வந்த தெய்வமே-(2)                         கண்ணே மணியே அமுதமே                         என் பொன்னே தேனே இன்பமே                         எண்ணம் மேவும் வண்ணமே                         என்னைத் தேடி வந்ததேன்               ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ   1.          எங்கும் நிறைந்த இறைவன் நீ             நங்கை உதரம் ஒடுங்கினாய்             ஞாலம் காக்கும் நாதன் நீ             சீலக் கரத்தில் அடங்கினாய்             தாய் உன் பிள்ளை அல்லவா             சேயாய் மாறும் விந்தை ஏன்                         கன்னி ஈன்ற செல்வமே                         இம்மண்ணில் வந்த தெய்வமே-(2)   2.          வல்ல தேவ வார்த்தை நீ             வாயில்லாத சிசுவானாய்             ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ             அன்னை துணையை நாடினாய்             இன்ப வாழ்வின் மையம் நீ             துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்                         கன்னி ஈன