சோபனமே சோபனமே சோபன

சோபனமே சோபனமே சோபன

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

பல்லவி

 

          சோபனமே சோபனமே

            சோபன பெண்காள் சோபனமே

 

அனுபல்லவி

 

            தீப ஞானஸ் நானப் பிரதாபத்

            தேவதைப் பெண்காள் சோபனமே - சோப

 

சரணங்கள்

 

1.         சங்கை மணாளர்க்குச் சோபனஞ் சோபனந்

            தவிது மைந்தர்க்குச் சோபனஞ் சோபன

            மெங்களரசர்க்குச் சோபனஞ் சோபன

            மேசு நாதர்க்குச் சோபனஞ் சோபன - சோப

 

2.         ஆட்டுக் குட்டிக்குச் சோபனஞ் சோபன

            மவர் மனைவிக்குச் சோபனஞ் சோபன

            தேட்டக் கணவர்க்குச் சோபனஞ் சோபனஞ்

            செல்வக் குமாரிக்குச் சோபனஞ் சோபனம் - சோப

 

3.         ஆதியான் மணவீட்டுக்குச் சோபனம்

            ஆற்றுமப் பெண்கள் கொண்டாட்டுக்குச் சோபனம்

            வேதநாயகன் பாட்டுக்குச் சோபன

            மேசியாவின் மன்றாட்டுக்குங் சோபனம் - சோப

 

4.         மங்கள மங்களஞ் சோபனமே

            வந்தனம் வந்தனஞ் சோபனமே

            துங்க பிதாவுக்கு மைந்தர்க்குமா விக்குங்

            தோத்திர கீர்த்தன சோபனமே - சோப

 

5.         தானான வர்க்குச் சோபனமே சச்சி

            தானந்தர்க் கானந்தச் சோபனமே

            மானார் சியோன் குமாரி திருமண

            வாளிக் கெந் நாளுக்குஞ் சோபனமே - சோப

 

 6.        அட்செய பெண்காள் சோபனஞ் சோபனம்

            அற்புத பெண்காள் சோபனஞ் சோபன

            முச்சித பெண்காள் சோபனஞ் சோபன

            முன்னத பெண்காள் சோபனஞ் சோபன - சோப

 

 7.        நிச்சய நிச்சய சோபனமே சதா

            நித்திய நித்திய சோபனமே

            மெய் சபை சீயோன் மங்கைக்கு நங்கைக்கு

            மேன்மை மணாளிக்குச் சோபனமே - சோப

 

- வேதநாயகம் சாஸ்திரிகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு