எல்லாமே
மண்ணுதானைய்யா
எல்லாமே
மாயைதானைய்யா
சூரியன்
கீழே நடப்பதுவும்
காண்பதுவும்
எல்லாமே
மண்ணுதானைய்யா
எண்ணிப்
பார்த்தா எல்லாமே
மண்ணுதானைய்யா
சிந்தித்துப்
பார்த்தா எல்லாமே
மண்ணுதானைய்யா
1. பை ஊராம் தாய்
வயிற்றில் பத்து
மாதம் இருந்ததுவும்
பொய்
ஊராம் இங்கு
வந்து குழந்தையாக
பிறந்ததுவும்
எத்தனை
நாள் இருப்போம்
என்று உத்திரவாதம்
இல்லையைய்யா
சத்திய
பரன் தேவன்
தந்த ஜீவன்
கூட இரவல்
ஐயா
2. பொன்னாக
மதிக்கப்படும்
மண்ணான மாய உடல்
பூப்போல
வதங்கி விடும்
ஜீவன் போன
பூத உடல்
கருவோடு
வந்ததைய்யா
ஆட்டம் போடும்
நீச உடல்
கருவாட்டுக்கு
இருக்கும் விலை
இதற்கில்லையே
நாச உடல்
3. மண்ணான
உன்னை மீட்க மானிடராய்
இயேசு வந்தார்
பொன்னான
ஆத்துமாவை
மரணத்திலே
ஊற்றிவிட்டார்
அவர்
பாதம் வந்தவர்க்கே
மோட்ச வழி காட்டுகின்றார்
ஆத்துமாவை
மீட்டு மோட்சத்திலே
வாழ வைப்பார்.
எல்லாமே
மண்ணுதானைய்யா
எல்லாமே
மாயைதானைய்யா
சூரியன்
கீழே நடப்பதுவும்
காண்பதுவும்
எல்லாமே
மண்ணுதானைய்யா
எண்ணிப்
பார்த்தா எல்லாமே
மண்ணுதானைய்யா
சிந்தித்துப்
பார்த்தா எல்லாமே
மண்ணுதானைய்யா
சரீரம்
மண்ணுதானைய்யா
ஆத்துமா
பொன்னுதானைய்யா
சரீரம்
மண்ணுதானைய்யா
என் நேசர்
பொன்னுதானைய்யா
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment