06 July 2023

கர்த்தரின் கிருபைகளை என்றென்றும்

கர்த்தரின் கிருபைகளை என்றென்றும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கர்த்தரின் கிருபைகளை

                        என்றென்றும் பாடிடுவோம்

                        அவர் உயர்ந்த நாமமதை

                        ஒருமித்து உயர்த்திடுவோம்

 

1.         சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவே

            சபையாம் நம்மை அழைத்தாரே

            சாற்றிடுவோம் நம் துதியினையே

            சர்வ வல்லவராம் இயேசுவுக்கே

 

2.         ஜீவன் சுகம் பெலன் யாவும் ஈந்து

            சேதமின்றி நம்மை காத்தாரே

            பூரிப்படனே நாம் பாடிடுவோம்

            புதிய பெலத்தால் நிறைந்திடுவோம்

 

3.         மரண பள்ளத்தாக்கில் நடந்தடினும்

            மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே

            சோர்ந்து போகாமல் ஜெயம் பெறவே

            கர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும்

 

4.         ஜெய கெம்பீரமாய் பாடிடுவோம்

            ஜெயம் முழங்க துதித்திடுவோம்

            அல்லேலூயா நாம் ஆர்ப்பரித்தே

            அல்லும் பகலும் பாடிடுவோம்

 

5.         பொன்னிலும் விலையேறப் பெற்றதாம்

            நம் நல் விசுவாசத்தை

            காத்துக் கொள்வோம்

            மாற்றுவார் சாயலை அந்நாளிலே

            மாண்புடனே அவர் மகிமையிலே

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...