பச்சை சம்பா நெல் எடுத்து குத்தி போடம்மா

பச்சை சம்பா நெல் எடுத்து குத்தி போடம்மா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          பச்சை சம்பா நெல் எடுத்து குத்தி போடம்மா

            கட தேங்காய உடைச்சி திருவி வைய்யம்மா

            பச்சைக்கிளி போல ஒரு பொண்ணு வாராம்மா

            புது பொண்ண பார்த்தா அசந்து போவ ரொம்ப ஜோரம்மா

 

                        கல்யாணம் கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

                        ஆட்டுக்குட்டியானவரின் மேன்மையான கல்யாணம்

 

1.         கெட்டி மேளச் சத்தமாக எதிர்பார்க்குது

            ஆரவார சத்தத்தில ஆளும் அசையிது

            சந்தோசமாய் சங்கீதமாய் துதி செலுத்திடு

            உற்சாகமாய் ஆனந்தமாய் ஆடிப்பாடிடு

            மணவாளன் வேகமாய் வருகிறார்

            மணவாட்டி ஆயத்தமாய் இருக்கிறாள்

 

            தண்ணி எடுக்கனும் வீட்ட பெருக்கனும்

            வாசல் வெளியே கோலம் போடனும்

            பாயாசத்தை பக்குவமா செஞ்சி இறக்கனும்

            சுக்கு இடிக்கனும் கடைக்கு போகனும்

            அச்சுவெள்ளம் வாங்கி அனுப்பனும்

            ஊருக்கெல்லாம் ஓலை வைச்சி அழைக்கனும்

 

2.         மன்னவரின் நிலையான ஆட்சி நடக்குது

            மன்னவரின் கல்யாணநாள் இதோ வந்தது

            பட்டாட கெட்டிக்கிட்டு தாவி குதிக்குது

            அத்தமக ளிடத்தில் நீ ஹோலி கொண்டாடு

            பூவைப் போல் ஆடைகள் அணிந்தவள்

            அவள் பரிசுத்த வான்களின் நீதியே

 

            பந்தல் போடனும் பாய விரிக்கனும்

            தோரணத்த கட்டி முடிக்கனும்

            வாய்க்குள்ள கற்கண்ட போடனும்

            அச்சு படிக்கனும் மெட்டு படிக்கனும்

            மொட்டுப்பூவை வாங்கி கொடுக்கனும்

            நாதஸ்வரம் சத்தம் எங்கும் கேட்கனும்

           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு