10 July 2023

ஆண்டுகள் பல கழிந்தும் மாற்றம் இல்லையே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆண்டுகள் பல கழிந்தும் மாற்றம் இல்லையே

            பரிதபிக்கும் கர்த்தர் குரல் கேட்கவில்லையோ?

            சத்தியத்தை அறிந்திடாமல் மாளுகின்றாரே

            திறப்பில் நிற்க சுவரை அடைக்க மனிதரில்லையே!

 

                             அனுபல்லவி

 

                        தரித்திருப்போம் ஜெபத்திலே

                        முன்னேறிச் செல்வோம் செயல் வீரராய்

                        பறைசாற்றுவோம் நல் சுவிசேஷத்தை

                        விரிவாக்கிடுவோம் நம் எல்லையை

 

1.         ஆமணக்கின் நிழலில் வாழும் யோனாக்களோ நாம்

            பரிதபிக்கும் கர்த்தர் குரல் கேட்கவில்லையோ?

            யாரை நான் அனுப்பிடுவேன் என் காரியமாய்?

            யார்தான் போவார் அறிவிக்கவே சுவிசேஷத்தை - தரித்திருப்போம்

 

2.         இமயம் முதல் குமரி வரை நம் ஜனங்களின்

            அழைப்பின் குரல் கர்த்தர் குரல் கேட்கவில்லையோ?

            அறிவிக்காமல் அமர்ந்திருந்தால் பழி சுமருமே

            எழும்பிடுவோம் பெலப்படுவோம் புறப்பட்டுச்செல்வோம் - தரித்திருப்போம்

 

3.         எல்லையைப் பெரிதாக்கின யாபேசைப்போல

            எழுந்து கட்டி ஜெயமடைந்த நெகேமியா போல

            சன்பல்லாத் தொபியாக்களை வீழச்செய்வோமே

            தேசத்தின் எல்லைகளை நாம் சுதந்தரிப்போமே - தரித்திருப்போம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...