04 July 2023

கர்த்தரைக் கெம்பீரமாய் போற்றிப் பாடுவேன்

கர்த்தரைக் கெம்பீரமாய் போற்றிப் பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

(சங்கீதம்: 101, 102, 104)

 

                    கர்த்தரை கெம்பீரமாய் போற்றிப் பாடுவேன்

                        அவர் சன்னதியில் ஆனந்தமாய் ஆராதனை செய்வேன்

                        கர்த்தரே தேவன் என்று எல்லோரும் அறிந்திடுங்கள்

                        அவரது மந்தையிலே ஆடுகளாய் இருந்திடுங்கள்

                        கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே மாறாதிருக்குமே

           

1.         மாறுபட்ட இதயம் என்னில் மாற வேண்டும் இறைவா

            வாழ்க உமது நாமமே வாழ்க வாழ்க என்றுமே

            வழி விலகும் மனிதர்களின் செயல்களை நான் வெறுக்கிறேன்

            வாழ்க உமது நாமமே வாழ்க வாழ்க என்றுமே

            கபடு செய்பவன் வீட்டுக்குள்ள இருப்பதில்லை

            பொய்வார்த்தை சொல்பவன் கண்முன்னே நிலைப்பதில்லை

            இறக்கத்தையும் நியாயத்தையும் குறித்து மட்டும் பாடுவேன்

            இறக்கத்தையும் நியாயத்தையும் குறித்து மட்டும் பாடுவேன்

            கர்த்தாவே என்னோடு நீர் மட்டும் இருக்கிறீர்

           

2.         உலகிலுள்ளோர் உணவுக்காக பயிர்களை நீர் விளைப்பித்தீர்

            வாழ்க உமது நாமமே வாழ்க வாழ்க என்றுமே

            உமது கிரியை எவ்வளவு அழகும் திரளுமானது

            வாழ்க உமது நாமமே வாழ்க வாழ்க என்றுமே

            ஆழமும் அகலமும் நிறைந்த சமுத்திரத்தை

            அழகாய் நிற்கும்படி ஆணையை பிறப்பித்தீர்

            மீன்களையும் சகல ஜீவ ராசிகளை படைப்பித்தீர்

            கர்த்தாவே உம்முடைய ஞானம் ரொம்ப உயர்ந்தது

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...