கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் தாழ்வடையேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    கர்த்தர் என் மேய்ப்பராய்

                        இருக்கின்றார் தாழ்வடையேன் - 4

 

1.         அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்

            குளிர் நீரோடும் ஊற்றினிலே

            என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்

            அவர் காட்டிய வழி செல்வேன் - கர்த்தர்

 

2.         எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்

            அவர் அன்பின் வழி வளர்ப்பார்

            மரண இருள் மூடிடும் வேளை

            இயேசுவே என்னோடிருப்பார் - கர்த்தர்

 

3.         எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே

            ஒரு பந்தியை ஏற்படுத்தி

            சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி

            அபிஷேகம் செய்திடுவார் - கர்த்தர்

 

4.         எந்தன் ஜீவிய காலம் எல்லாம்

            அவர் கிருபை வரம் பெறுவேன்

            எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்

            என்றென்றும் வாழ்ந்திடுவேன் - கர்த்தர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு