சிலுவையோர் புனிதச் சின்னம்

சிலுவையோர் புனிதச் சின்னம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    சிலுவையோர் புனிதச் சின்னம்

                        ஜெகத்து ரட்சகன்

                        இயேசு மரித்துயிர்த் தெழுந்த - சிலுவை

 

1.         கல்வாரியில் முளைத்து ககனம்

            வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்து

            இகபரத்தை இணைத்து

            இல்லாரைச் செல்வராக்கும்

            பொல்லாரை நல்லோராக்கும்

            நல்லாயன் இயேசு சுவாமி

            தோளில் சுமந்து சென்ற  - சிலுவை

 

2.         அலகை சிரமுடைக்க

            அகந்தை நினைவழிக்க

            பலமயல்களகற்றப் பவக்

            கடலைக் கடக்க

            உலகில் உயிர்களோங்க

            உன்னத வாழ்வு பெற

            பலகுல மனிதரும் பகைத்துப்பின்

            போற்றுகின்ற! - சிலுவை

 

3.         யூதர்க்கிடறலான

            இயேசு நாதர் சிலுவை

            கிரேக்க ஞானியருக்கு

            பைத்தியமச் சிலுவை

            அன்பர்க் கடைக்கலமும்

            தேவ பெலனும் சிலுவை!

            தன்னை உணர்ந்தவர் தம்

            தனிப்பெருமை சிலுவை - சிலுவை

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு