எந்தன் சிலுவையை சுமந்து கொண்டு
எந்தன் சிலுவையை சுமந்து கொண்டு
உம் பாத சுவடுகள் பின் செல்லுவேன் (2)
எந்தன் சுயத்தை வெறுமையாக்கி -
2
உந்தன் சித்தம் நான் செய்திடுவேன் -
2
1. சிலுவை இல்லையேல் சிங்காசனம் இல்லை
பாடுகள் இல்லையேல் ஆளுகையில்லை
எந்தன் கஷ்டங்களில் கண்ணீரின்பாதையில்
உந்தனை கண் நோக்கிடுவேன் -
2
2. உந்தன் காயத்தின் தழும்புகளை
எந்தன் சரீரத்தில் தரித்துகொண்டேன் (2)
உந்தன் பாடுகளின் பாதைகளில்
விரும்பியே என்னை இணைத்துக்கொண்டேன் -
2
3. எப்பக்கத்தில் நான் நெருக்கப்பட்டாலும்
ஒடுங்கி நான் ஒருபோதும் போவதில்லை (2)
கலக்கங்களில் மனம் முறியும் வேளையில்
சோர்ந்து நான் போவதில்லை -
2
4. பொன்னைப்போல நான் புடமிடப்பட்டாலும்
உத்தமனென்று (உத்தமியென்று) விளங்கிடச்செய்யும் -
(2)
சோதனையை எந்தன் சாதனையாக்குவீர்
ஜீவகிரீடம் சூடிடச்செய்வீர் -
2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment