05 July 2023

கதிரவன் தோன்றும் காலையிதே

கதிரவன் தோன்றும் காலையிதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கதிரவன் தோன்றும் காலையிதே

                        புதிய கிருபை பொழிந்திடுதே - நல்

                        துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே

                        கதிரவன் தோன்றும் காலையிதே

 

1.         வான சுடர்கள் கானக ஜீவன்

            வாழ்த்திடவே பரன் மாட்சிமையே

            காற்று பறவை ஊற்று நீரோடை

            கர்த்தருக்கே கவி பாடிடுதே

 

2.         காட்டில் கதறி கானக ஓடை

            கண்டடையும் வெளி மான்களை போல்

            தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்

            தற்பரன் யேசுவை தேடிடுவோம்

 

3.         கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க

            கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்

            கேரூபீன்கள் மத்தியில் வாழும்

            கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார்

 

4.         எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்

            என் கரங்கள் குவிந்தே வணங்கும்

            பாக்கியம் நான் கண்டடைந்தேன்

            யாக்கோபின் தேவனே என் துணையே

 

5.         காலை விழித்தே கர்த்தரின் சாயல்

            கண்களும் செவியும் காத்திருக்கும்

            பாதம் அமர்ந்து தேவனை ருசித்து

            கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்

 

6.         வானம் பூமி யாவும் படைத்தீர்

            வானம் திறந்தே தோன்றிடுவீர்

            ஆவல் அடங்க என்னையும் அழைக்க

            ஆத்தும நேசரே வந்திடுவீர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...