04 July 2023

சாமி நம்ம சாமி பெரியவரு என்னோட சாமி

சாமி நம்ம சாமி பெரியவரு என்னோட சாமி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சாமி நம்ம சாமி பெரியவரு என்னோட சாமி

            சாமி நம்ம சாமி இயேசுதான் என்னோட சாமி

            யார் என்ன சொன்னாலும் எது நடந்தாலும்

            காசுபணம் கொடுத்தாலும் உயிரே போனாலும்

            விட்டுக் கொடுக்கவே மாட்டேன் கொடுக்கவே மாட்டேன்

            என்றென்றைக்கும் எப்போதுமே விட்டுக் கொடுக்கவே மாட்டேன்

 

                        ஊரு உலகத்தில உன்னையும் என்னையும் நேசிக்க

                        இரவும் பகலும் அட உனக்காக யோசிக்க

                        ஆழம் அகலம் இல்லா உண்மையான அன்பு இது

                        கண்ணீர் மறைஞ்சி கவலை மாறும் இயேசு சாமி அன்பு இது

                        பாதாளம் அவரை தடுத்து நிறுத்த முடியல

                        நீயும் நானும் செய்த பாவம் அவரின் அன்பை குறைக்கல

                        இவரைப்போல நேசிக்க யாரு இருக்கா காமி

                        ஒரு அப்பா போல தோழில் சுமக்கும் எங்கள் இயேசு சாமி

           

1.         ராஜாவிட்டு பிள்ளை நம்ம ஸ்டைலே தனிதான்

            நான் நின்னாலே பிசாசு பயந்து நடுங்குவான்

            அதிகாரம் கையிலே ஆறுதல் செய்யுமே

            இயேசுவின் வார்த்தைதான் என்னுடைய சாமி

 

2.         என் உயிரெல்லாம் அவருதான் எல்லாமே அவர்தான்

            சுவாசக் காற்று இதய துடிப்பு அவரு மட்டும்தான்

            அவரைவிட்டால் யாருமில்லை அவரைப்போல எவருமில்லை

            எனக்காக அவர் செய்யாத நன்மைகள் ஒன்றுமேயில்லை

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...