05 July 2023

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்

                        கர்த்தர் என் மேய்ப்பர் அது ஒன்றுப் போதுமே

                        அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்

                        ஆனந்த தண்ணீரண்டையில் கொண்டு சென்றிடுவார்

                        அவர் எந்தன் ஆத்துமாவை என்றும் தேற்றிடுவார்

                        நீதியின் பாதையில் என்னை நடத்திடுவார்

 

1.         மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்

            பொல்லாப்புக்குப் பயப்படேன்

            தேவரீர் உம் கோலும் தடியும் என்னைத் தேற்றும்

 

2.         என் சத்துருவின் முன்னிலையில் ஒரு பந்தியை

            ஆயத்தப்படுத்துகிறீர்

            என் தலையை எண்ணெய்யால் அபிசேகம் செய்கிறீர்

            என் பாத்திரம் என்றுமே நிரம்பி வழிந்திடுமே

 

3.         என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும்

            என்னைத் தொடர்ந்திடுமே

            நான் உம்முடைய வீட்டிலே என்றும் நிலைத்திருப்பேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...