07 July 2023

அன்பு இயேசுவே அருகில் வாருமே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பு இயேசுவே அருகில் வாருமே

            ஆறுதலும் ஆதரவும் எனக்குத் தாருமே

            ஆறுதலும் ஆதரவும் எனக்குத் தாருமே

                        நான் செல்லும் பாதை எல்லாம்

                        என்னோடு நடக்க வேண்டும்

                        நான் சோர்ந்து போகும் போது

                        உம் தோளில் சாய வேண்டும்

 

1.         அல்லும் பகலும் என்னைக் காக்கும் அன்பு தெய்வமே

            அன்றும் இன்றும் என்றும் தொடரும் இந்த பந்தமே

            காலம் எல்லாம் கடந்தவரே ஞாலம் எங்கும் நிரைந்தவரே

            காத்திருந்து தேடுகிறேன் கனவெல்லாம் உம் முகமே

            காண வேண்டுமே இயேசு - உம் முகம் பார்க்க வேண்டுமே தேவனே

 

2.         கோடி கோடி நன்மை செய்யும் உந்தன் கருணையே

            ஓடி ஓடி வந்து என்னைத் தேற்றும் கரங்களே

            தனிமையில் என் உடனிருப்பீர் தோல்வியில் உம் பலன் கொடுப்பீர்

            துயரினில் உம் தோள் சுகமே உனது இல்லம் என் அகமே

            தாங்க வேண்டுமே என்னையே-என்னுடன் தங்க வேண்டுமே இயேசுவே

 

 

- Fr. Arockia Ramesh

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...