என்னை பிரமிக்கத்தக்கவிதமாய் படைத்த தேவனே

என்னை பிரமிக்கத்தக்கவிதமாய் படைத்த தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

சங்கீதம் 139

 

          என்னை பிரமிக்கத்தக்கவிதமாய் படைத்த தேவனே

            எந்தன் நினைவுகளை நிமிடம்தோறும் அறிந்த தேவனே

            காணும் மலையும் வெளியும் காற்றும் கடலும் படைத்த தேவனே

            உம்மை போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி துதித்து பாட்டுப் பாடுவேன்

 

                        கனகாபிஷேகனை ஒளிர்ப்பிரகாசனை

                        பவம்போக்கும் நாசனை பாடிடாயோ

 

1.         வானத்திற்கு ஏறினாலும் அங்கேயும் இருக்கிறீர்

            பாதாளத்தில் சென்றிட்டாலும் அங்கேயும் இருக்கிறீர்

            செட்டை அடித்து கடலை தாண்டி பறந்துப்பறந்து சென்றிட்டாலும்

            அங்கேயும் இருக்கிறீர் எங்கேயும் இருக்கிறீர் - கனகா

 

2.         எத்தனை அருமையாம் உமது ஆலோசனைகள்தாம்

            எண்ணிக்கையில் அவைகளும் எவ்வளவு அதிகமாம்

            எண்ணி எண்ணிப் பார்த்திட்டால் மணலைவிட அதிகமாம்

            எண்ணாமலே வாழ்ந்திடும் மனிதர்க்கு நான் எதிரியாம் - கனகா

 

3.         நடந்திட்டாலும் படுத்திட்டாலும் என்னை சூழ்ந்திருக்கிறீர்

            நாவில் வார்த்தை பிறவாமுன்னே அதையும் அறிந்திருக்கிறீர்

            உமது ஆவிக்கு மறைவாய் எங்குசெல்ல கூடுமோ

            உமது சமூகம் விட்டுவிட்டு எங்கே ஓட முடியுமோ - கனகா

 

4.         இருள் என்னை மூடிக்கொள்ளும் சூழ்நிலைகள் வந்தாலும்

            இருளும் வெளிச்சமாயிருக்கும் உமது தெய்வ அருளினால்

            வேதனை உண்டாக்கும் வழி என்னிலுண்டோ என்றறிந்து

            நித்திய வழியிலே நீரே என்னை நடத்தும் - கனகா

 

- Dr. C. Besky Job

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு