21 July 2023

தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    தென்றல் காற்றே வீசு

                        இயேசுவோடு பேசு

                        மனு மைந்தனாய் அவதாரமோ

                        மரி பாலனாய் அதி ரூபனோ

                        அதிகாலை அதிசயமோ

                        அதிகாலை அதிசயமோ

 

1.         யூத ராஜன் இவர்தானோ

            யாரோ யாரோ யாரோ யாரோ

            மனுவேலன் இவர் பேரோ

            யாரோ யாரோ யாரோ யாரோ

            ஆதியும் அந்தமும் இவர்தானோ

            நீதியின் சூரியன் இவர்தானோ

            நல்ல ஜீவ அப்பமும் இவர்தானே

            பணிந்து போற்றுவோம்

            மெய் ஜீவ நதியும் இவர்தானே

            இயேசுவை புகழுவோம்

 

2.         முற்றிலும் அழகு உள்ளவரோ

            யாரோ யாரோ யாரோ யாரோ

            அற்புதம் செய்யும் வல்லவரோ

            யாரோ யாரோ யாரோ யாரோ

            பரலோகப் பிதாவின் தாசன் அன்றோ

            ஆத்துமாவுக்குகந்த நேசரன்றோ

            எம்மை மீட்கும் மீட்பர் இவர்தானே

            இவரைப் புகழுவோம்

            எம்மை மேய்க்கும் மேய்பனும் இவர்தானே

            பணிந்து போற்றுவோம்

 

3.         தேற்றும் தேவன் இவரன்றோ

            யாரோ யாரோ யாரோ யாரோ

            தேற்றரவாளன் இவரன்றோ

            யாரோ யாரோ யாரோ யாரோ

            முன்னவர் சொன்னவர் இவர்தானோ

            முன்னணை மன்னவர் இவர்தானோ

            பவ இருளை நீக்கும் ஒளி தானே

            இவரை ஆராதிப்போம்

            நம்மை மீட்கும் இரட்சிப்பின் வழி தானே

            புகழ்ந்து ஆர்ப்பரிப்போம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...