சாரோனின் ரோஜாவே மருதோன்றி பூங்கொத்தே

சாரோனின் ரோஜாவே மருதோன்றி பூங்கொத்தே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          சாரோனின் ரோஜாவே மருதோன்றி பூங்கொத்தே (உன்னதபாட்டு 1:14)

            பூரண அழகுள்ள எந்தனின் இயேசுவே (உன்னதபாட்டு 5:16)

 

                        வர்ணிக்க முடியாதைய்யா

                        வார்த்தைகள் போதாதைய்யா

                        உந்தனின் அழகில் எந்தனை இழந்தேன்

                        என் ஆத்ம நேசரே

 

1.         வெண்மையும் சிவப்புமானவர்

            பதினாயிரம் பேரில் சிறந்தவர் (உன்னதபாட்டு 5:10)

            லீலி புஷ்பமே (உன்னதபாட்டு 2:2)

            சிச்சிலி மரமே நேசக் கொடியே (உன்னதபாட்டு 2:3)

            உமக் கொப்பானவர் இல்லையே

 

2.         தலை தங்கமயமானவர்

            தலை மயிர் சுருள்சுருளானவர் (உன்னதபாட்டு 5:11)

            இனிய நேசரே

            பூமாந்தர்களில் நீர் விசேஷித்தவரே

            உமக் கொப்பானவர் இல்லையே

 

3.         கண்கள் புறாவின் கண்களே (உன்னதபாட்டு 5:12)

            உம் கன்னங்கள் பூவைப் போன்றதே (உன்னதபாட்டு 5:13)

            என் மணவாளனே

            மலர் போல் உதடுகள் வெண்மையும் மதுரமே (உன்னதபாட்டு 5:13)

            உமக் கொப்பானவர் இல்லையே

 

4.         கால்கள் வெள்ளைக்கல் தூண்கள் (உன்னதபாட்டு 5:15)

            கரங்கள் பொன்வளையல் போன்றதே (உன்னதபாட்டு 5:14)

            முற்றிலும் அழகுள்ளவரே (உன்னதபாட்டு 5:16)

            சரீர ரூபமோ தங்கத்தைப் போலவே

            உமக் கொப்பானவர் இல்லையே           

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே