தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுவதும்
தேவனைத்
துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும்
ஏற்றச்
செயல் அல்லவோ
- 2
கர்த்தர்
பெரியவர் புகழத்தக்கவராம்
மகத்துவமுடையவராம்
சத்தியரை
ஹா... ஹா...
ஹா
துதியுடன்
ஹோ... ஹோ...
ஹோ
பாடியே
ம்... ம்... ம் கொண்டாடு
- 2
1. லேவியரும்
பாடகராயினர்
கைத்தாளம்
தம்புரு மீட்டி
இசைத்திட்டனர்
- 2
ஆசாரியர்
பூரிகை ஊதினர்
பாடினர்
கர்த்தரே நல்லவர்
என்றிட்டனர்
- 2 - தேவனைத்
2. தேவனைத்
துதிக்கும் புதுப்பாட்டு
ராஜனை
பாடிட எமது
நாவிலுண்டு
வேந்தனைப்
பாடிடும் பாடலைக்
கண்டு நாதனை நம்புவர்
நன்குணர்ந்து
- தேவனைத்
3. புதுப்பாட்டை
கர்த்தருக்குப்
பாடுங்கள்
நியாயமும்
இரக்கமும் பாடலில்
இணைத்திடுங்கள்
கெம்பீர
தொனியில் பாடுங்கள்
வாருங்கள்
இரட்சண்ய
கன்மலையைப்
பாட - தேவனைத்
4. கர்த்தரின்
கிருபை என்றுமுண்டு
என்று எஸ்றாவும்
மக்களும் பாடினரே
மகிமையாய்
வெற்றி சிறந்திட்டார்
என்று மிரியாமும்
ஸ்திரீகளும்
ஆடினரே
- Dr. C. Besky
Job
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment