10 July 2023

தேவாதி தேவன் வாசஞ்செய்யும் தூய ஆலயம்

தேவாதி தேவன் வாசஞ்செய்யும் தூய ஆலயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தேவாதி தேவன் வாசஞ்செய்யும் தூய ஆலயம்

            தூயாதி தூயரும் தேடும் நல்ல தேவ ஆலயம்

            மண்ணும் விண்ணும் மகிழ்வுடன் போற்றிடும்

            இன்றும் என்றும் துதி எழும் ஆலயம்.

 

                        ஆலயத்தில் இன்றும் என்றும் ஆவலாய் உம் சந்நிதியில்

                        ஆனந்தமாய் கீதம் பாடி ஆண்டவரைப் போற்றிடுவோம்

                        சங்கீதங்கள் பாடி நாமும் சேனைகளின் கர்த்தர் நாமம்

                        தூயவரே உம்மை (எந்)நாளும் தூதரோடு வாழ்த்துவோம்.

 

2.         வானாதி வானங்கள் கொள்ளா உந்தன் வல்ல நாமமே

            தூதர்கள் போற்றிப் பாடிடும் உம் தூய நாமமே

            பாதம் பற்றி பாரிலென்றும் போற்றுவோம்

            கீதம் பாடி கர்த்தர் துதி சாற்றுவோம்.

 

3.         எந்நாளும் பாடிப் போற்றுவோம் எம் மீட்பர் துதியை

            இந்நாளில் சேர்ந்து வாழ்த்துவோம் நம் நேச ராஜனை

            ஆன்றோர் சேர்ந்து ஆலயம் நிரப்புவோம்

            ஆமென் ஆமென் அல்லேலுயா பாடுவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...