04 July 2023

மணவாளன் வரப்போறாரு நான்

மணவாளன் வரப்போறாரு நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மணவாளன் வரப்போறாரு

            நான் முதல் ஆளா பார்க்கப் போறேன்

            மானாட்டம் துள்ளிடுவேன் மயிலாட்டம் ஆடிடுவேன்

            குயிலாட்டம் பாடிடுவேன் மலராட்டம் சிரித்திடுவேன்

            மணவாட்டியா மறைவில நின்னு அவரைப் பார்ப்பேன்

            நடு ஜாமத்திலும் கண்ணுமுழிச்சி காத்திருப்பேன்

 

                        என் மேசியாவை பார்த்திங்களா

                        சாரோன் ரோசாவை பார்த்தீங்களா

                        என் மன்னவரை கண்டீங்களா

                        என் மனசத்தான் சொன்னீங்களா

 

1.         மாலைப்பூவே அவர் வரும் நாளை நீ அறிவாயா

            நவ்வா மரமே உனக்கு தெரிஞ்சிருந்தா எனக்கு சொல்வாயா

            நான் புத்தி உள்ள பெண் என்று பெயரெடுப்பேன்

            தீச்சட்டியோடு எண்ணையோடு எதிர்கொண்டு செல்லுவேன்

 

2.         ரோசாப்பூவே அவரை எதிர்பார்த்து பூத்துவிட்டாயா

            வாழைப்பூவே நீ வாசனையை தந்திடுவாயா

            நான் விழித்திருந்து சுறுசுறுப்பாய் புறப்படுவேன்

            அவரை விடாமலே பின்தொடர்ந்து சென்றிடுவேன்

 

3.         காவேரி நதியை குமரனை காணப்போறாயோ

            சம்பா நெற்கதிரே அவர் கழுத்தில் சேர்த்திடுவாயோ

            நான் எண்ணெய் கேக்கும் பெண்களை ஒதுக்கிடுவேன்

            கதவு தட்டினாலும் திறப்பதில்லை ஓடிடுவேன்

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...