Posts

Showing posts from May, 2019

அனுபந்தம் - கிறிஸ்தவ கீர்த்தனைகள்

Image
விடுபட்ட பாடல்கள் கிறிஸ்தவ கீர்த்தனைகள் பாடல் பா.எண் அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை 022 அருட் பெரும் சோதி நீ அடியேனை 028 அல்லேலூயா என்றுமே அவருடைய 025 அன்பர்க்கருள் புரிவோனை 006 ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய் 001 இசையா பிளவுண்ட மலையே 013 இதோ அடியேனிருக்கிறேன் 015 இயேசுநாதனே இரங்கும் என் ஏசு நாதனே 010 உலகும் வானும் செய்தாளும் 029 உன்னதமானவர் சன்னிதி மறைவில் 020 எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா 011 என்னபாக்கியம் அம்மா ஏகனருள் 016 கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல் 024 கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம் 021 கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் 018 கொலைக்காவனம் போறார் 005 சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் 004 சுதன் பிறந்தார் சுதன் பிறந்தார் 002 சேவித்துக் கொண்டேன் ஐயா 014 சொல்லிவந்துன் பாதம் புல்லினேன் 027 தூயர் தூயர் தூயரெனத் தூதர் தினம் 026 தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன் 007 பரம சேனை கொண்டாடினார் 003 பரலோக தந

பரலோக தந்தாய் நின்னாமம்

30. கரகரபிரியை         ஆண்டவர் பிரார்த்தனை           ஆதிதாளம் 1.           பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி              பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம்             வரவே, நினது திருவுளச் சித்தமே             பரமதில் போலிங்கும் துலங்கிடவே. 2.          அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம்             அயலார் செய்பிழை பொறுப்பதுபோல்,             இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே             நன்றருள்வாய் நரபரிபாலா! 3.          சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு             தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்;             நீதா, ராஜ்யம் வல்லப மகிமை             நினைக்கே யுரிய எக்காலமுமே!

உலகும் வானும் செய்தாளும்

29. (33T)      சங்கராபரணம்            விசுவாசப் பிரமாணம்        ஏகதாளம் 1.           உலகும் வானும் செய்தாளும்              ஒப்பில் சர்வ வல்லவராய்             இலகும் அருளும் தந்தையாம்             எம்பிரான் றனை நம்புகிறேன். 2.          அவர் ஒரு வேறா மைந்தனுமாய்             ஆதி முதல் எங் கர்த்தனுமாய்த்             தவறில் யேசுக் கிறிஸ்துவையும்             சந்ததமே யான் நம்புகிறேன். 3.          பரிசுத்தாவி அருளதனால்             படி மேல் கன்னி மரியிடமாய்             உருவாய் நரர் அவதாரமாய்             உதித்தார் எனவும் நம்புகிறேன். 4.          பொந்து பிலாத்ததிபதி நாளில்             புகலரு பாடுகளை யேற்று,             உந்தும் சிலுவையிலறையுண்டு             உயிர் விட்டாரென நம்புகிறேன். 5.          இறந்தே அடங்கிப் பாதாளம்             இறங்கி மூன்றாம் தினமதிலே             இறந்தோரிடம் நின்றே உயிரோ             டெழுந்தா ரெனவும் நம்புகிறேன். 6.          சந்தத மோட்சம் எழுந்தருளிச்             சர்வ வல்ல பரனான             எந்தை தன் வல பாரிசமே

அருட் பெரும் சோதி நீ அடியேனை

28. (13 Y)    உன் திருவரம் தருவாயே சுத்தசாவேரி                                                             ஆதிதாளம் பல்லவி              அருட் பெரும் சோதி, நீ அடியேனை மீட்டே-உன்             திருவரம் தருவாயே. அனுபல்லவி                    மருள் கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே                     அருள் தந்து காப்பாயே. - அருட் சரணங்கள் 1.          அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ,             தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ,             செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன் நீ,             புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம் நீ. - அருட் 2.          வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ,             புன் செயலை அளிக்கும் இன்சொல் இறைவன் நீ,             மன் பதையை ரட்சித்த மாண்புடை யேசு நீ,             என் மனதுக்குகந்த அன்பின் சொரூபம் நீ. - அருட் 3.          இத்தரையோர்க்கு வேண்டும் சுத்த சுவிசேஷம் நீ,             புத்துயிரை அளிக்கும் நித்திய சீவன் நீ,             முத்தி நெறியைக் காட்டும் மூலப் பரப்பொருள் நீ,             பித்தன் எ

சொல்லிவந்துன் பாதம் புல்லினேன்

27. (197 Y)   உன் பாதம் புல்லினேன் ஆனந்தபைரவி                                              ஆதி தாளம் பல்லவி           சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும்           தூரமாகாதாள்வாய், நேசனே. அனுபல்லவி             எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து             கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. - சொல் சரணங்கள் 1.          இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால்             இறையோனே காதில் நுழையாதோ?             திரும்பி என்துயர் களையாயோ?-உன் திருவடி             சேர்க்க என்றனை அழையாயோ?             அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அலைபுரளும் தன்மை தேறாய்;             விரும்பி நீ வா என்று காறாய், மெய்யனெ நின்னருட் பேறாய். - சொல் 2.          சந்ததம் உனையே நம்பினேன்,-சத்துருப்பேயின்             சற்பனையால் மனம் வெம்பினேன்.             சொந்தம் நான் உனக்கியம்பினேன்,-நினைக்காணாதே             துக்கமே விடத்ததும்பினேன்.             பந்தமாமெ வையும் மாளப் பற்றெலாமுன் பாதத்தேறச்             சிந்தை உன்னருளே வீறச் சீவன் முத்தி

தூயர் தூயர் தூயரெனத் தூதர் தினம்

26. (26 Y)    தேவனைத் துதிப்போமே தேசிகத்தோடி                                               ஆதிதாளம் பல்லவி தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி சுத்தரான தேவனைத் துதிப்போமே. சரணங்கள் 1.          நேயமோ டெங்கள் பவம் போக்கவும்,             நீசரைத் தேவ புத்திரராக்கவும்,             நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. - தூயர் 2.          நீடிக தயை யுடன் நீசரை             நித்தம் பரிபாலிக்கும் நேசரை             நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். - தூயர் 3.          அடியார் பிழை பொறுத்தன்புடன்             ஆதரித்தாரே மிக இன்புடன்;             அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். - தூயர் 4.          அந்தமும் ஆதியு மின்றியே,             அன்பு பரிசுத்தம் நீதியொன்றியே,             அத்தன் உலகோரை நித்தமும் காக்கிறார். - தூயர் - ல. வ. கி.

அல்லேலூயா என்றுமே அவருடைய

25. (56 T) பியாகு                             150-ம் சங்கீதம்                ஏகதாளம் 1.           அல்லேலூயா என்றுமே அவருடைய             பரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள்,             என்றும் அவரைத்துதியுங்கள்.             வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து             வல்லமை நிறைந்த கிரியைக்காக             அல்லேலூயா அல்லேலூயா. 2.          மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்             எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்,             என்றும் அவரைத்துதியுங்கள்.             வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்             யாழோடும் குழலோடும் தாளங்களுடனும்             அல்லேலூயா அல்லேலூயா 3.          பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்             இங்கித சங்கீதத்தோடும் அவரைத்துதியுங்கள்.             என்றும் அவரைத் துதியுங்கள்.             சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்,             சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்.             அல்லேலூயா அல்லேலூயா

கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல்

24. (54 T) நாட்டை                 127-ம் சங்கீதம்                ஆதிதாளம் 1.           கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல்              கட்டும் நம் முயற்சிகள் கடிது வீணாகுமே.             கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில்             காவலர் கடும்பணி கண்விழித்தும் வீணே. 2.          காலை கண் விழித்திட வேலையில் தரித்துமே             மாலை மட்டும் தொழில் சீலமுடனே செய்தும்             வருத்தத்தின் அப்பமே வரும் விருதாப்பலன்             கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில். 3.          கர்த்தரின் சுதந்திரம் பிள்ளைகளே, தாயின்             கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் செயல்களாம்.             வாலிப குமரரும் வலியர் கையம்புகள்             பல வானம்பராத்தூணி பண்புடன் நிறையுமே. 4.          பலமுளான் எவனும் பாக்யவான்,             ஒலிமுக வாசலில் வலிமையுடனின்று             பகைவரைக் கண்டுமே பயமெதுமின்றியே             பலபல பேசுவான் பாரினிலே யென்றும்.

பூமியின் நற்குடிகளே கர்த்தரை என்றும்

23. (51 T)     போற்றிப் பாடிக்கொண்டாடுவோம் மோகனம்                100-ம் சங்கீதம்                ஆதி தாளம் பல்லவி           பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும்           போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள். அனுபல்லவி             ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன்             சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். - பூமி சரணங்கள் 1.          கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள்,             காசினியில் நாமல்ல கடவுளே சிருஷ்டித்தார்.             அற்புத தேவனின் அரிய ஜனங்களாவோம்,             ஆண்டவர் ஆடுகளாய் அவனியில் இருக்கின்றோம். - பூமி 2.          ஆலய வாசல்களில் அரிய துதிகளோடும்,             அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகளோடும்,             சீல முடனே வந்து சிறப்புடனே பணிந்து             சீர் பெரும் ஆண்டவரைச்சேர்ந்துமே துதியுங்கள். - பூமி 3.          கர்த்தர் மகாவல்லவர், கர்த்தர் அருட்கிருபை,             காசினியில் தேடினும் காண்பீரோ பெரியது.             தற்பரன் உண்மையோ தலை முறைக்கு முள்ளது,             தலை வணங்கியே பரன் த

அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை

22. (50T)     ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே சங்கராபரணம்.                 98-ம் சங்கீதம்                  ஆதிதாளம் பல்லவி           அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை           ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே. அனுபல்லவி             இரக்கம் கிருபை சத்தியம் விளங்க             இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார். - அதி சரணங்கள் 1.          நீதியை ஜாதிகள் முன்பாக நிறுத்தி             நித்திய ரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்திப்             பூமியின் எல்லைகள் நின்புகழ் காணப்             புரிந்தனை நின் அருள் பூரணமாக; - அதி 2.          பூரிகை எக்காளம் சுரமண்டலத்தால்             பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாமம்,             கீத சத்தத்தாலே கீர்த்தனம்பண்ணிக்             கிருபாகரனைப் போற்றிடுவீரே. - அதி 3.          ஆழியும் பூமியும் அதிலுள்ள யாவும்             ஆறுகள் மலைகள் அனைத்துமே பாடும்.             ஜாதிகள் யாவையும் சரிவர நடத்தி             நீதியாய் நியாயம் விசாரிக்க வருவார். - அதி 4.          பரமபிதாவே பரிசுத்த தேவா,             பாரினில் உதித்த தேவ குமாரா,   

கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம்

21. (49 T)     போற்றக் கூடிடுவோம் சங்கராபரணம்               95-ம் சங்கீதம்                  ஏகதாளம் பல்லவி           கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம்,           கன்மலையைப் போற்றக் கூடிடுவோம். அனுபல்லவி                         கர்த்தரின் தூய சந்நிதி நாடி                         நித்தியனைத் துதியுடன் கொண்டாடி, சரணங்கள் 1.          தேவாதி தேவன் தேவர்க்கும் ராசன்             தெள்ளமுது தெளிதேன் மாதேவன்,             மூவாதி முதல்வன் மூவுலகாள் வோன்,             மூவுல கனைத்தும் படைத்த நிமலன். - கர்த் 2.          ஆழங்களும் மகா உயரங்களும்             அத்தன் திருக்கையில் உள்ளனவே.             அகன்ற சாகரம் ஆன பெரும் பூமி             ஆயின யாவும் அவர் கரத்தால் நேமி. - கர்த் 3.          நம்மைப் படைத்த நல்லாயன் முன்னே             நாம் பணிந்திடுவோம் பண்புடனே,             நம் கர்த்தர் என்றும் நல் மேய்ச்சல் ஈவார்.             நம்பு மடியார்க்கு நாதன் கோன் ஆவார். - கர்த் 4.          கர்த்தரின் சத்தம் காதினால் கேட்போம்,             கடுஞ் சினமும்

உன்னதமானவர் சன்னிதி மறைவில்

20. (48 T)    சரண் புகுவேன் ஸ்ரீராகம்                            91-ம் சங்கீதம்                  ஆதிதாளம் பல்லவி                    உன்னதமானவர் சன்னிதி மறைவில்                    வந்தடைக்கலம் சரண் புகுவேன். சரணங்கள் 1.          சத்தியம் பரிசை கேடகமாகும்             சர்வ வல்லவர் நிழலில் தங்கிடுவேன். 2.          வேடன் கண்ணிக், கொள்ளைநோய், சங்காரம்             விக்கினம் யாவும் விலக்கித்தற்காப்பார். 3.          வாதை, பொல்லாப்பு, பயங்கரம் அகற்றி,             வாழ் நாளைக் கழிக்கக் கிருபை செய்வார். 4.          நீடித்த நாட்களால் திருப்தியாக்கி             நித்திய ரட்சிப்பைக் கட்டளை யிடுவார். 5.          பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கும்             சதா காலமும் மகிமை உண்டாகும்.