தயாபரா என் உள்ளத்தில்


141.   Jesus! Thine all victorious Love.      (187)

1.         தயாபரா! என் உள்ளத்தில்
            தேவன்பை ஊற்றுமேன்;
            அப்போது திவ்ய நேரத்தில்
            வேரூன்றி, நிலைப்பேன்.

2.         வானாக்னி என்னில் மூட்டியே
            துராசை எரிப்பீர்;
            எப் பாவமேடு மலையும்
            உருக்கி விடுவீர்.

3.         முன் பெந்தெகோஸ்தே நாளிலே
            தீப்போலத் தோன்றினீர்;
            சுட்டெரிப்பின் நல்லாவியே!
            என் பாவம் அழிப்பீர்.

4.         உள்ளிந்திரியங்கள் எங்கணும்
            ஊடுருவிச் சென்றே,
            சுத்தாங்கம், ஜீவன், ஜோதியும்,
            உண்டாகச் செய்யுமே.

5.         அப்போது இடறாமலும்
            நற்பாதை செல்லுவேன்;
            என் மீட்பர் பேரில் முற்றிலும்
            எக்காலும் சாருவேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு