18 May 2019

நேச ஆத்ம நாயகா


154.   Precious Saviour, dearest Friend,   (380)

1.         நேச ஆத்ம நாயகா!
            நோக்கிப் பாருமேன்;
            நிறைவாய் என் உள்ளத்தில்
            அன்பை ஊற்றுமேன்.

பல்லவி

                        என் நேசா! அருமை நாதா!
                        எந்தன் உள்ளத்திலே
                        தேவாவியாலே இன்னும் மேன்மேலும்
                        திவ்ய பேரன்பை ஊற்றுவீரே;

2.         என்னை உம்தன் சொந்தமாய்
            என்றும் ஆளுவீர்,
            தேவ சித்தம் என்னிலே
            நிறைவேற்றுவீர்.

3.         ஏதுமற்ற பாலன் போல்
            வந்து நிற்கிறேன்
            உம்மை நம்பிக் கேட்கையில்,
            அன்பை ஊற்றுமேன்.

4.         இன்னமும் மேன்மேலுமே
            அன்பை நாடுவேன்;
            திவ்ய நேசம் வாஞ்சித்தே
            கெஞ்சிக் கேட்கிறேன்.

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...