30 May 2019

பரலோக தந்தாய் நின்னாமம்


30.

கரகரபிரியை         ஆண்டவர் பிரார்த்தனை           ஆதிதாளம்

1.         பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி
            பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம்
            வரவே, நினது திருவுளச் சித்தமே
            பரமதில் போலிங்கும் துலங்கிடவே.

2.         அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம்
            அயலார் செய்பிழை பொறுப்பதுபோல்,
            இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே
            நன்றருள்வாய் நரபரிபாலா!

3.         சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு
            தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்;
            நீதா, ராஜ்யம் வல்லப மகிமை
            நினைக்கே யுரிய எக்காலமுமே!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...