18 May 2019

இயேசுநாதா பக்தியாக


152.   Praise the Saviour         (369)

1.         யேசுநாதா! பக்தியாக
            வந்துபெற்ற நன்மைக்காக
            உம்மையே ஆனந்தமாகப்
            பாடிப் போற்றுவோம்.

2.         வல்ல நாமம் துதிப்போமே.
            திவ்ய சக்தி பெறுவோமே.
            பாவம் முற்றும் ஜெயிப்போமே
            தேவ ஆவியாய்.

3.         அருள் வாக்குத் தவறாதே
            உம்தன் அன்பும் குறையாதே
            உம்மை விட்டுப் பிரியாதே
            பற்றிக்கொள்ளுவோம்.

4.         யேசுநாதா! உம்மைச் சாரும்
            தேவபக்தியோடு காரும்
            பின்பு பேரானந்தம் தாரும்
            மோட்ச லோகத்தில்.

5.         அங்கே துக்கமுமில்லாமல்
            பாவம், பாடும் அணுகாமல்
            இன்ப வாழ்வும் ஒழியாமல்
            வாசம் பண்ணுவோம்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...