பரம சேனை கொண்டாடினார்


3. (45C)       பரம சேனை கொண்டாடினார்

ஆனந்தபைரவி                                              ஆதிதாளம்

பல்லவி
          பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப்
          பாடினார்.

சரணங்கள்
1.         பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து,
            பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து, - பரம

2.         இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி,
            கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி, - பரம

3.         சர்ப்பப்பேயை வென்று, சகலர்க் கேய நன்று
            அற்புதமாக இன்று அத்தன் பிறந்தார் என்று, - பரம

­- தை. ரை.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே