மா நேசர் பேரில் சார்ந்து


132.   On Thee my heart is resting.  (245)

1.         மா நேசர் பேரில் சார்ந்து
                        நான் இளைப்பாறுவேன்,
            தயாபரா வேறென்ன
                        மெய்ப் பாக்யம் நாடுவேன்?
            மெய்ஞான ஜோதிகண்டு
                        பேரன்பை ருசித்தேன்;
            ஆனந்தக்களிப்போடு
                        ஏக்காலும் வாழுவேன்.

பல்லவி

                        மா நேசர்பேரில் சார்ந்து
                        நான் இளைப்பாறுவேன்;
                        தயாபரா! வேறென்ன
                        மெய்ப்பாக்யம் நாடுவேன்?

2.         ஏராளமாம் என் பாவம்
                        நிவிர்த்தி பண்ணினீர்
            மாசற்ற பலியாக
                        நீர் ரத்தஞ் சிந்தினீர்;
            உம்மோடிறந்த என்னை
                        உயிர்த்தெழும்பச் செய்தீர்
            தேவாவியின் பேரீவும்
                        என்னில் கடாட்சித்தீர்.

3.         என்னாலே யேசுநாதா!
                        உம் சித்தம் வேலையும்
            நாள்தோறும் நடந்தேற
                        கடாட்சம் புரியும்;
            அசக்தனே யானாலும்
                        சற்றேனும் தளரேன்;
            உம்மாலே சர்வபெலன்
                        எப்போதும் பெறுவேன்.

4.         விரோதம் நேரிட்டாலும்
                        சமீபம் நிற்கிறீர்.
            மெய் விசுவாசம் தந்து
                        என் சோர்வை நீக்குவீர்.
            மா திவ்ய மார்பில் சாய்ந்து
                        நெஞ்சார சுகிப்பேன்
            பேரன்பர் முகங்கண்டு
                        ஆனந்தங் கொள்ளுவேன்.

5.         என் பாவப்பாசக் கட்டும்
                        நீர் முற்றும் அவிழ்த்தீர்,
            ஆ! யேசுவே! நீர் என்னை
                        ஆட்கொண்டு காக்கிறீர்;
            பூலோக எந்த வாழ்வும்
                        இல்லாமல் போயினும்;
            உம் அருள் செல்வம் இன்னும்
                        குன்றாமல் பெருகும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு