30 May 2019

தூயர் தூயர் தூயரெனத் தூதர் தினம்


26. (26 Y)    தேவனைத் துதிப்போமே

தேசிகத்தோடி                                               ஆதிதாளம்
பல்லவி
தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி
சுத்தரான தேவனைத் துதிப்போமே.

சரணங்கள்
1.         நேயமோ டெங்கள் பவம் போக்கவும்,
            நீசரைத் தேவ புத்திரராக்கவும்,
            நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. - தூயர்

2.         நீடிக தயை யுடன் நீசரை
            நித்தம் பரிபாலிக்கும் நேசரை
            நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். - தூயர்

3.         அடியார் பிழை பொறுத்தன்புடன்
            ஆதரித்தாரே மிக இன்புடன்;
            அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். - தூயர்

4.         அந்தமும் ஆதியு மின்றியே,
            அன்பு பரிசுத்தம் நீதியொன்றியே,
            அத்தன் உலகோரை நித்தமும் காக்கிறார். - தூயர்

- ல. வ. கி.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...